2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாழில் சடலம் மீட்பு

R.Tharaniya   / 2025 ஜூலை 09 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் புதன்கிழமை (09) அன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் என்ற 48 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் உள்ளிட்ட சிலர் செவ்வாய்கிழமை (08) அன்று இரவு குழுவாக இருந்து மதுபானம் அருந்தியதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தற்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதர்சன் வினோத்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .