2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யாழில் ​போதை பொருளுடன் ஒருவர் கைது

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதை மாத்திரைகளை சுன்னாகம் பொலிஸார் சனிக்கிழமை (8) அன்று கைப்பற்றினர்.

யாழ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகர் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு இளைஞர் ஒருவர் எடுத்து வருவதாக  புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 500 போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 25 வயதான சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளைஞர் ஒருவரை கைது செய்து குறித்த சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X