2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை

Editorial   / 2026 ஏப்ரல் 03 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்   வெளியாகின. இதில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இம்முறை கலை மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் 3A பெறுபேறுகளைப் பெற்றுள்ளதோடு, அனைத்துத் துறைகளிலும் கணிசமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துறைவாரியாகச் சாதனை படைத்த மாணவர்களின் விவரம்:
கலைத்துறை:

ச. டிலக்சனா – 3A

செ. அர்ச்சனா – 3A

ச. அகல்யா – 2A, B

த. தேனுசன் – 2A, B

வி. விதுசா – 2A, C

யோ. சன்சிஹா – A, 2B

வணிகத் துறை:

தெ. நிலோஜன் – 3A

க. காருண்யா – 3B

சி. சபித்தா – 2B, C

கணிதத் துறை:

சி. டிலக்சி – A, 2B

அ. தேனுஜன் – A, 2B

இ. இசையமுதன் – A, 2B

வ. டர்சிகன் – 2B, C

உயிரியல் தொழில்நுட்பத் துறை:

ல. தர்சினி – A, B, C

அ. பேரெழிலன் – 2B, C

ஜ. சஜீனா – B, 2C

பொறியியல் தொழில்நுட்பத் துறை:

யோ. கோபிகிருஷ்ணா – B, 2C

த. ரதுர்ஷன் – 2C, S

விஞ்ஞானத் துறை:

தே. ஐங்கரன் – B, C, S

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை வெளியாகியுள்ள பெறுபேறுகள் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இது கல்லூரியின் வரலாற்றில் சிறந்த பெறுபேறாகக் கருதப்படுவதோடு, வலிகாமம் வலய மட்டத்திலும் இக்கல்லூரி முன்னிலை பெற்றுள்ளமை கல்விச் சமூகத்தினர் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .