Freelancer / 2025 ஜூலை 19 , மு.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் புலோலி, வல்லிபுரக்குறிச்சியைச் சேர்ந்த பொன்னையா தேவராசா (வயது 71) என்ற வயோதிபர் ஆவார்.
இம் மாதம் ஆறாம் திகதி மாலை பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகாமையில் சைக்கிளில் சென்றவரை பட்டா வாகனம் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். (a)
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026