Janu / 2023 மே 29 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மரக்காரம்பளை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை உள்நுளைந்த குழுவொன்று வீட்டின் பிரதான வாயிலை உடைத்து சேதப்படுத்தியதுடன், காணிக்குள் உள்நுளைந்து கதவுகள், யன்னல்களையும் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் காலை வீடு சென்று பார்த்தபோதே தமது வீடு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அருகில் உள்ள கண்காணிப்பு கமராவில் தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் தொடர்பான காட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
க. அகரன்




4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago