R.Tharaniya / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை (27) பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின்
போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது.
அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக நகர் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள முறையற்ற மதில்கள் காரணமாக வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற முடியாது பொது மக்கள்
சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.






அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .