2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது

Freelancer   / 2022 நவம்பர் 07 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவு மற்றும்  சந்திவெளி பொலிஸ் பிரிவுகளில்  பல்வேறுபட்ட திருட்டு சம்பவங்களில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் 6 பேரினை கல்குடா பொலிஸார் நேற்று (6) கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து திருடப்பட்டிருந்த பெருமளவான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.சந்தனவிதானகே தெரிவித்துள்ளார்.

இதன்போது தண்ணீர் மோட்டர் 12, மோட்ட சைக்கிள் 1, துவிச்சக்கர வண்டி 2, மின்விசிறி, இலத்திரனியல் தராசு, தங்க நகைகள் சில, என பல பொருட்க்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .