Freelancer / 2023 மார்ச் 19 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஏறாவூர் வாவியில் உல்லாச படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நகர சபையின் தவிசாளர் எம்எஸ். சுபைர், இப்படகுச் சேவையை, சம்பிரதாய பூர்வமாக நேற்று (18) ஆரம்பித்துவைத்தார்.
ஏறாவூர், வாவியோரம் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவுக்கு பொழுதுபோக்காக வரும் சிறுவர்கள் இப்படகுச் சேவையைப் பயன்படுத்தலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஏறாவூர்ப் பிரதேத்தில் பெண்களை வலுவூட்டும் நிகழ்ச்சிக்கமைய, இப்படகுச் சேவையை நடத்துவதற்காக கடந்த வருடம் 12 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், கடந்தகால நிவாகத்தால் இதற்கான முன்னெடுப்புக்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மீனவர் கூட்டுறவுச் சங்கம், மட்டக்களப்பு மாவட்டக் கடற்றொழில் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சு அலுவலகத்திலும் அனுமதியைப் பெற்று இச்சேவையை ஆரம்பித்துள்ளதாக தற்போதைய தவிசாளர் எம்எஸ். சுபைர் தெரிவித்தார்.
நகர சபைக்கான வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் இத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் வாவியோர சிறுவர் பூங்காவிற்கு பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் பொழுதுபோக்காக வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (N)
49 minute ago
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
54 minute ago
2 hours ago
2 hours ago