Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 10 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் புணாணை கிழக்கு கிராம அதிகாரி பிரிவிலுள்ள, கேணிமடு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெறுமதியான தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
கேணிமடு பகுதியில் தோட்டம் வைத்து பராமரித்து வரும் சி.முகம்மட்சாலி (வயது 64) என்பவரது தோட்டத்திலுள்ள ஐம்பத்தி மூன்று (53) தென்னை மரங்களை தேசப்படுத்தியுள்ளது.
இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதுடன், காய்த்த தென்னை மரங்கள் மற்றும் காய்க்கும் தருவாயில் உள்ள தென்னை மரங்கள், வளர்ந்து வரும் தென்னை மரங்கள் என்பவற்றினை பகுதியளவிலும், முற்றாகவும் சேதமாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட சி.முகம்மட்சாலி தெரிவித்தார்.
மேலும், சுற்றுவேலியை சேதமாக்கி இரவு வேளையில் யானைகள் வருகை தந்து தேசப்படுத்தியுள்ளதுடன், தொடர்ச்சியாக வருகை தருவதால் உயிர் அச்சுறுத்தலுடன் வாழ்ந்து வருவதுடன், பாரிய நஷ்டங்களையும் எதிர்கொண்டுள்ளேன்.
இப்பிரதேசத்திற்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையினால், தொடர்ச்சியாக இவ்வாறான அழிவுகளைத் தவிர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும், யானை வேலி அமைத்துள்ள நிலையிலும் வீதியில் அமைக்கப்பட்ட வேலியை பகல் வேளையில் அகற்றினால் இரவு வேளைகளில் உரியவர்கள் மீள பொறுத்தாமையினால், அதனூடக யானைகள் வருகை தருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே இதுதொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், யானை வேலியை முறையாக பராமரித்து எங்களது உயிர்களையும், பயிர்களையும் பாதுகாக்க உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago