2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 4 கைதிகள் விடுதலை!

Freelancer   / 2022 ஜூன் 14 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு,  ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று (14)  இலங்கையில் உள்ள சிறைகளில் இருந்து 173 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஏலவே தெரிவித்திருந்தார்.

இதன்படி,  தண்டனை இரத்து ஊடாக 141 கைதிகளையும், 14 நாட்கள் தண்டனை காலம் குறைப்பின் ஊடாக 32 கைதிகளையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக மட்டக்களப்பு சிறைச்சாலையிலும் சிறைவாசம் அனுபவித்து வந்த 4 கைதிகள் இன்று (14)  காலை மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகரவின் வழிகாட்டலில், பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் ,சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .