Princiya Dixci / 2022 ஜூலை 06 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய தேவைக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், மட்டக்களப்பு ஐ.ஓ.சி ஊடாக இன்று(06) டீசல் விநியோகிக்கப்பட்டதாக மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான முத்துக்குமார் செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சுகாதார மருத்துவ பாதுகாப்பு நலன் கருதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பூலன்ஸ் மற்றும் மருந்தப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு இவ்வாறு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளன
இதன்போது எரிபொருளை பெற்றுக்கொள்ள வீதிகளில் காத்திருந்த வாகன சாரதிகளும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago