2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மட்டு. விஜயம்

Super User   / 2011 மார்ச் 27 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பிலுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிர்ப்பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் என்பவற்றின் புனரமைப்பு வேலைகள் குறித்து அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடல் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள நீர்ப்பாச திணைக்களத்தின் பிராந்திய அலுலவகத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பிரதம பொறியியலாளர் மோகன்ராஜிடம் விபரங்களை கேட்டறிந்து கொண்டார்.

இதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளை அமைச்சர் சந்தித்தார்.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் மற்றும் பிரதேச செயலாளர்கள் விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

இதையடுத்து றூகம் குளத்தை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். (படங்கள்: எம்.சுக்ரி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .