2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

மண்முனைப்பற்றில் உணவுக்கான வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் உணவுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு சிரமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தலைமையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தனின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் ஆரையம்பதி இராஜதுரைக் கிராமத்தில் உணவுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணியில் அப்பகுதி கிராம அலுவலரின் தலைமையில் இளைஞர், யுவதிகள்  இந்த வேலைத்திட்டத்தில் இணைந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .