2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாநாடு

Sudharshini   / 2015 ஜனவரி 28 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப் பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகம், 2015ஆம் ஆண்டை  சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஆண்டாக பிரதேச மட்டத்தில் பிரகடனப்படுத்தியுள்ளது.


வாகரை பிரதேச செயலகத்துக்குட்பட்ட  மக்களின் தேவையினை அறிந்து, அத்தேவையினை பூர்த்தி செய்வதற்கான செயற்திட்டங்களை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கும் நோக்கில், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாநாடு நடத்தப்படவுள்ளது.  


பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இம்மாநாடு தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (27) கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


சுயதொழில் முயற்சியாளர்கள், தாம் பெறும் பொருளாதார ஸ்த்திர தன்மையினூடாக  தமது பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் போஷாக்கு நிறைந்த சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை கொண்ட சுபிட்சமிகு குடும்பத்தினூடாக சுபிட்சமிகு கிராமத்தினை  உருவாக்குவதே இம்மாநாட்டின் குறிக்கோளாகும்.


கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகமானது இவ்வருடம் சுயதொழில் முயற்சியாளர்களில் அக்கறை கொண்டு சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாநாட்டினை நடாத்த தீர்மானித்துள்ளதுள்ளது.


சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில்   கடன் வழங்கிய, கடன் வழங்கி வருகின்ற  அரச நிறுவனங்களான வாழ்வின் எழுச்சி திணைக்களம், சமூக சேவைத் திணைக்களம், கிராம அபிவிருத்தி திணைக்களம், சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி அமைச்சு என்பனவும் இம்மாநாட்டில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.


இக்கலந்துரையாடலில், கடன் வழங்கும் நிறுவனங்களான பிறண்டினா, கொமர்ஷல் கிரடிட், எல்.ஓ.எல்.சி, விசன்பண்லங்கா, அரச சார்பற்ற நிறுவனங்களான உலக தரிசன நிறுவனம், எஸ்.கோ, கே.பி.என்.டீயு, கரையோரம் பேணல் திணைக்களம், அகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .