2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

பொன்னாலையில் 2 வாள்கள் மீட்பு; ஒருவர் கைது

Niroshini   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   பொன்னாலை பகுதியில், இன்று (27) காலை, இரண்டு வாள்களுடன், சந்தேகநபர்  ஒருவரை, விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

 பொன்னாலை மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு வாள்கள் இருப்பதாக,  யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையும்  வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து  குறித்த வீட்டை  சுற்றி வளைத்தனர் .

இதன்போது, இரு வாள்கள் மீட்க்கப்பட்டதுடன், வாள்களை கையிருப்பில் வைத்திருந்த குறித்த வீட்டின் உரிமையாளரையும் கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்த்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்க்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .