2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

புலிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விரட்டியடிப்பு

Freelancer   / 2021 நவம்பர் 27 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நினைவுதினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாண நகரில் சமூகநீதிக்கான அமைப்பினரின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் தேசிய கொடியை ஏந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்தது.

இந்த நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறும் இல்லாவிடின் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முட்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X