2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல்

Freelancer   / 2023 மார்ச் 22 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணின் 3/4 பவுன் தங்கச் சங்கிலியினை அபகரித்த குற்றசாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களையும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையை முன்னெடுத்த குற்றத் தடுப்பு பொலிஸார்  சங்காணை மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நபர்களை கைது செய்திருந்தனர்..

அவர்கள் நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொழுது விளக்கமறியளில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .