Editorial / 2025 ஒக்டோபர் 26 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 826 பேரில் பாடசாலை மாணவர்கள் ஐவரும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
தங்கள் தாய்மார்களால் செய்யப்பட்ட குற்றங்களுக்காக தங்கள் தாய்மார்களுடன் ஐந்து வயதுக்குட்பட்ட 42 குழந்தைகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக ஆணையர் கூறினார், அவர்களில் 19 பேர் சிறுவர்கள் மற்றும் 23 பேர் பெண்கள்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 826 பேர் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருப்பதாகவும், அவர்களில், 805 பேர் ஆண்கள் என்றும் வீரசிங்க கூறினார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இருபத்தொன்று என்றும் அவர் வெளிப்படுத்தினார்.
நாடு முழுவதும் 36 சிறைச்சாலைகள் இருப்பதாகவும், அந்த சிறைச்சாலைகளில் தற்போது 36,000 பேர் இருப்பதாகவும், எனினும் அந்த சிறைச்சாலைகளில் 15 ஆயிரத்து 500 பேர் மட்டுமே இருக்கமுறையும் என்றும் சிறைச்சாலை ஆணையர் கூறினார்.
சிறைச்சாலைகளின் கொள்ளளவு நானூறு சதவீதமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 25,173 சந்தேக நபர்கள் இருப்பதாக வீரசிங்க கூறினார்.
27 minute ago
31 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
38 minute ago