2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

’வடக்கிலும் டெல்டா பரவும் அபாயம்’

Niroshini   / 2021 ஜூலை 29 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

வடக்கு மாகாணத்துக்கும் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக, வடக்கில் தடுப்பூசியினை பெற்றிருந்தாலும்  சுகாதார நடைமுறையை பின்பற்றுவது அவசியம் என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கேதீஸ்வரன் தெரிவித்தார் 

 

 வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில், நேற்று (28) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 

இது தொட்பில் தொடர்ந்துரைத்ந அவர், தற்போது இந்து கோவிகல்களில் திருவிழாக்கள் இடம்பெறுகின்றன  எனவும் வடக்கு மாகாணத்தில் ஏற்கெனவே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது திருவிழாக்கள் இடம்பெற்றதன் காரணமாக  பல இடங்களில் கொத்தணிகள் உருவாகியுள்ளன எனவும் கூறினார்.

 எனவே, வடக்கில் தடுப்பூசியை பெற்றோரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அபாய நிலையில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .