Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை
Editorial / 2023 மே 17 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் அவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இன்று(17) காலை சரணடைந்தார். அதன்பின்னர் அவரை பொலிஸார் கைது செய்தனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோதே இமானுவேல் ஆனோல்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலை யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
4 hours ago
8 hours ago
27 Sep 2023