2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

கல்லறையை தோண்டிய இருவர் கைது

Niroshini   / 2021 ஜூன் 07 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள ஊரிக்காடு மயானத்தில், கல்லறையை தோண்டிய இருவர, இன்று (07) கைதுசெய்யப்பட்டுள்ளனர்

ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை இருவர் தோண்டி வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில், ஸ்தலத்துக்கு விரைந்த வல்வெட்டித்துறை பொலிஸார், குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, நகைகளுடன் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களில் இருந்து நகைகளை எடுக்கவே, கல்லறையை தோண்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சந்தேகநபர்களால் அகழப்பட்ட கல்லறைக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .