2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

துரத்தி துரத்தி இளைஞன் மீது வாள்வெட்டு

Niroshini   / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் - பரமேஸ்வர சந்திப் பகுதியில், இன்று (15) காலை 10.30 மணியளவில், இளைஞன் ஒருவரை, கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளது.

சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர்,அந்த இளைஞனை, பரமேஸ்வர சந்தியில் வைத்து வழிமறித்து, கடுமையான வாள்வெட்டை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைகழகம் பக்கமாக அவ்விளைஞன் தப்பியோடிய போதும், துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார்.

வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமையானது மாணவர்கள் மத்தியில் அச்சநிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .