Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 21 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
வடக்கு மாகாண பிரதம செயலாளராக சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டமையானது, எதிர்காலத்தில் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்குமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவரது யாழ்ப்பாணம் அலுவலகத்தில், இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாணத்தில், தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள் எனவும் அவ்வாறான ஒரு பிரதேசத்தில் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரை இந்த அரசாங்கமானது பிரதம செயலாளராக நியமித்துள்ளமை என்பது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக காணப்படுகின்றது எனவும் கூறினார்.
அதாவது, பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் தமிழ் வாசிக்கவோ, எழுதவோ முடியாத நிலையில், அவர் எவ்வாறு வடக்கு மாகாணத்தில் செயற்படப்போகிறார் என்பது ஒரு கேள்வியாக காணப்படுகின்றதெனவும், விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
50 minute ago
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
16 Oct 2025