2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

த.தே.ம.மு அமைப்பாளராக சுரேஷ் நியமனம்

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  தர்மலிங்கம் சுரேஷ் மத்திய குழுவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் மத்திய குழுவில் நீக்கப்பட்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தொரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .