2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

யாழ். சரசாலையில் வெடிப்பு; தாயும் மகனும் படுகாயம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். தென்மராட்சி பிரதேசத்திலுள்ள சரசாலைப் பகுதியில் மர்மப்பொருளொன்று இன்று அதிகாலை வெடித்ததில் தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டு வளவினுள் தோட்டம் செய்வதற்காக நிலங்களைக் கொத்தியபோதே இந்த மர்மப்பொருள் வெடித்துள்ளது.

சரசாலையைச் சேர்ந்தவர்களான ஸ்ரீதரன் உதயராணி (வயது 28), ஸ்ரீதரன் மதுசன் (வயது 4) ஆகியோரே இந்த வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆவர்.

இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .