2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

237 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Niroshini   / 2021 ஜூன் 14 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன், சண்முகம் தவசீலன்

பருத்தித்துறை கடற்பரப்பில், இன்று (14) அதிகாலை,  237 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பது அவதானிக்கப்பட்டு, அதை மறித்து சோதனை செய்த போதே, அதற்குள் 2 சாக்குகளில் கேரள கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சந்தேக நபர்களால் கடலில் வீசப்பட்ட மேலும் 6 சாக்குகள், கடற்படையினர் கடலில் தேடுதல் நடத்தி மீட்டனர்.

மொத்தமாக, 08 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ள 237 கிலோ 500 கிராம்  கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றினர்.

சர்வதேச கடல் எல்லையில் இருந்து, டிங்கி படகு மூலம் கேரள கஞ்சாவை கொண்டு வர கடத்தல்காரர்கள் முயன்றதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 71 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் இருவர், 27 வயதுடையவர்கள் எனவும், அவர்கள்; பருத்தித்துறை-  கொட்டடியைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றையவர் அச்சுவேலி - வளலாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும், கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X