2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

கொவிட் ஜனாஸாக்களை வட்டமடுவில் அடக்க அனுமதி

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ்  

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்வர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராமத்தில் 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இக்காணியை, கொவிட் 19 தொழில்நுட்ப குழு ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசு செய்ததையடுத்தே, கொவிட் 19 செயலணியாலும் சுகாதார அமைச்சாலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இக்காணியில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகள், இன்றிலிருந்து (06) ஆரம்பிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இம்மையவாடியில் சுமார் 4,000 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான இட வசதியுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம். நிஹார் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிககையில், “தற்போது மையவாடிக்கான உட்கட்டமைப்பு வசதிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மையவாடிக்குள் 14 உள் வீதிகள் அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. மையவாடியைச் சூழ சுமார் 10 கிலோ மீற்றர் மதில் எழுப்பப்படவுள்ளது. மின்சார வசதிகள் மற்றும் ஜனாஸாக்களின் உறவினர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

“ஓட்டமாவடி, மஜ்மா நகர் கொவிட் 19 மையவாடியின் நிலப்பரப்பு ஜனாஸாக்களால் பூரணமாகியுள்ள நிலையில், கிண்ணியா வட்டமடு கிராம மையவாடியை துரிதமாக ஏற்பாடு செய்யும்படி பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X