2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழரின் விருந்தோம்பலில் வாழை இலை பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளது. மேலும் அவர்கள் வாழ்வியல் கலாசாரத்தில் கலந்த  ஒன்றாகவும் உள்ளது.

சூடான உணவுகளை வாழை இலையில் போட்டு சாப்பிடும் போது இலையின் முக்கியமான ஊட்டச்சத்துகளையும் உணவு இழுத்துக்  கொண்டுவிடும். வாழை இலையை உணவுடன் சேர்த்து சாப்பிடவும் செய்யலாம். இதனால் முடி பிரச்சினைகள் நீங்கும்.

வாழை இலையில் உணவருந்துவதால், இளஞர்களுக்கு உள்ள இளநரையை போக்க முடியும். வாழை இலையில் தொடர்ந்து உணவருந்தி  வந்தால், இளநரை மறைந்து கறுப்பு முடிகள் வளரத் துவங்கும்.

அத்துடன் நமக்கு ஏற்படும் வயிற்று புண் ஆறுவதுடன்,. வாழை இலையில் உள்ள குளோரோபில் எனும் வேதிபொருள், பல நச்சு கிருமிகளை அழிக்கக் கூடியது. இதனால் நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகிறது.

தொடர்ந்து வாழை இலையில் சாப்பிடுவதால், தோல் சார்ந்த நோய்கள் மறைந்து, பளபளப்பான தோல் கிடைக்கும். இது நமது முடியை பலகாலம் கருப்பாக வைத்து இளநரையை மறைக்கும் ஆற்றல் கொண்டது.

நாம் உபயோகித்த பின்னும் வாழை இலை ஆடு, மாடு போன்ற  விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. இல்லையென்றால் மக்கி, இயற்கை உரமாக மாறிவிடுகிறது. இது சூற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்று.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .