2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆல்ம்சேனை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 30 வயது இளைஞனை, மூதூர் பொலிஸார் நேற்றிரவு (15)  கைது செய்துள்ளனர்.

இளைஞனிடமிருந்து 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருளுடன் இளைஞன் நடமாடுவதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இளைஞனை சோதனைக்கு உட்படுத்தியபோது, மேற்படி நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக மூதூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X