2022 ஜனவரி 22, சனிக்கிழமை

மௌன பிரார்த்தனையும் மகஜர் கையளிப்பும்

Editorial   / 2021 நவம்பர் 25 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள், பொதுமக்களுக்காக இன்று (25) மௌன பிரார்த்தனை நடைபெற்றது.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் இலங்கைத்துறைப் பகுதியிலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கு பாடசாலை மாணவர்கள் பயணிக்கின்ற இழுவைப் பாதை படகு சேவை இடம்பெறும் இடத்திலேயே இப்பிரார்த்தனை நடைபெற்றது.

இலங்கைத்துறை பிரதேச பகுதி பாடசாலை மாணவர்கள், பெற்றார் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மௌன பிரார்த்தனையில், வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி கலந்துகொண்டார்.

இதேவேளை, இலங்கைத் துறையிலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கான பாலம் ஒன்று அமைத்துத் தருமாறு, வெருகல் பிரதேச செயலாளரிடம் பிரதேச மக்கள் மகஜரையும் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X