2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

மு.காவின் தேசிய அமைப்பாளராக தௌபீக் எம்.பி நியமனம்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஒலுமுதீன்  கியாஸ், எப்.முபாரக்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது மேற்கொண்டிருந்தார்.

கடந்த பல வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராகச் செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜாப்தீன் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே, பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .