Editorial / 2020 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
’இப்போது நாங்கள் மூன்று பேர்’ என்று தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை மகிழ்ச்சியோடு வெளியிட்டிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி.
முன்னணி நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியும் பல வருடங்களாக காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இந்தத் தம்பதியினர் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்று அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் ” இப்போது நாங்கள் மூன்று பேர்” என்று விராட் கோலி அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ளப் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் உலகிற்கு அறிவித்திருக்கிறார்.
அனுஷ்கா சர்மாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் விராட் பகிர்ந்த அதேப் படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
16 minute ago
19 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
22 minute ago