2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்தியாவிலிருந்து வரும் உயர்தர திரவ உரங்கள்

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தர நைட்ரஜன் திரவ உரங்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்த மாத இறுதிக்குள்  விவசாயிகளுக்கு வழங்கப்படும் என  விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நெல் அதிகளவில் பயிரிடப்படும் அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதலில் இந்த நைட்ரஜன் திரவ உரங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்திற்கு தேவையான மூன்று வகையான உரம், கரிம திரவ உரம் மற்றும் பொட்டாசியம் குளோரைட் ஆகியவை ஏற்கனவே அம்பாறை விவசாய மேம்பாட்டு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .