2021 ஜூலை 28, புதன்கிழமை

அரசாங்கத்துக்கு சமிக்ஞை ​காட்டுகிறார் ரணில்

Editorial   / 2021 ஜூன் 13 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சில விவகாரங்கள் தொடர்பில் அரசியல் தலையீடுகள் இன்றி, அதிரடியான நடவக்கைகளை எடுக்கவேண்டும் என்றும். மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மேலும் சுமையை சேர்க்க வேண்டாம் என்றும் அதனூடாக நாட்டை அழிக்க வேண்டாம் என்றும் ​கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் விசேட செவ்வியிலே​யே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ரணில் விக்கிமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழக்கப்படுமாயின் ரூபாவின் விலை குறைவடைந்து, ஒரு டொலருக்கு 300 ரூபாய் செலுத்தவேண்டிய நிலைமை ஏற்படும். அத்துடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை   2017 ஆம் ஆண்டில் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எங்களுடைய அரசாங்கம்  நடவடிக்கை எடுத்தது.

வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவிற்கு பொருடள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி கிடைத்ததன் ஊடாக, ஆடை மற்றும் மீன்பிடித் தொழில்கள் ​மேம்படுவதற்கு வழிவகுத்தது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையால்,  இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை தொடர்பாக  ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சலுகையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படலாமென எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயால் நமது சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது. கப்பலின் பிரச்சினையுடன், எங்கள் மீன்பிடித் தொழிலுக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, நமது அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இலங்கை பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் வாங்கியது. தற்போது, ​​நமது பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவர தேயிலை மற்றும் ஆடைத் தொழில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அத்தகைய விஷயத்தில்,   ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரண சலுகையை இழந்தால், ரூபாய் மதிப்பு குறைந்துவிடும், மேலும் ஒரு டொலருக்கு சுமார் 300 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஆயிரக்கணக்கான வேலைகளும் இல்லாமற்போகும்.

இவ்வாறான ஆபத்தை எதிர்கொள்ளும்போது, ​​ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை ,இனிமேலும் அரசியல் மயமாக்கவேண்டாம். அத்துடன், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .