2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

சற்குணதேவிக்கு விளக்கமறியல்

Editorial   / 2023 ஜூன் 05 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை,  எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாது,

வடமராட்சி கிழக்கு தளையடி  பொதுளையாட்டரங்கில்   03/06/2023 அன்று  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்தபோது அவர்கள் யார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோர் வினவினர்.

 அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்கப்பட்டபோது அவர் மீது தாக்குதல் நடத்தி தப்பிச்சென்றுவிட்டார். 

இந்நிலையில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்றக் குற்றச்சாட்டை முன்வைத்து மருதங்கேணி பொலிஸாரால்   சற்குணதேவி ஜெகதீஸ்வரன் திங்கட்கிழமை (05) காலை செய்யப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த  கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மருதங்கேணி  பொலிஸ்  அதிகாரிகள் உட்பட்ட 10 க்கு மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபருக்கு  பிணை வழங்க வேண்டாம் என்று நீதிமன்றத்திடம் கோரிநின்றனர்.

அக்கோரிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .