2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கினை எதிர்வரும் வருடம் மே மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் வழக்கின் மேலதிக நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்குமாறு இரு தரப்பு சட்டத்தரணிகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு  தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிவாதிகள் 8 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன்,  ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு  எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .