2022 ஜூலை 07, வியாழக்கிழமை

சிறுத்தையுடன் கட்டிப்புரண்ட விவசாயிகள்

Editorial   / 2022 ஜனவரி 25 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத்தில் புகுந்து தாக்கிய சிறுத்தையுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விவசாயிகள் இரண்டுபேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பாப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாறன் (வயது 62). விவசாயி. அங்குள்ள தனது சோளத்தோட்டத்தில் நேற்றுக் காலை 7 மணியளவில் மாறன் வேலை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது தோட்டத்தில் புகுந்து பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று மாறனின் மீது திடீரென பாய்ந்து கடித்து குதறத்தொடங்கியது. இதனால் நிலைகுலைந்துபோன மாறன் அய்யோ, அம்மா என்று அலறினார். பின்னர் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு சிறுத்தையுடன் போராட தொடங்கினார்.

கட்டிப்புரண்டு சண்டை

மாறனின் சத்தத்தை கேட்டு பக்கத்து தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்த விவசாயி வரதராஜ் என்பவர் அங்கு ஓடிவந்தார். சிறுத்தை மாறனை கடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து, மாறனை சிறுத்தையிடம் இருந்து மீட்க முயன்றார்.

அப்போது ஆவேசம் அடைந்த சிறுத்தை வரதராஜை நோக்கி பாய்ந்து அவரையும் தாக்கியது. ஒரு கட்டத்தில் 2 விவசாயிகளும் சேர்ந்து சிறுத்தையுடன் சோளத்தோட்டத்துக்குள் கட்டிப்புரண்டு சண்டையிட்டார்கள்.

அப்போது சத்தம் கேட்டு வெங்கடாசலம் என்பவர் ஓடிவந்தார். அவரையும் சிறுத்தை தாக்கியது. ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் அவர் அக்கம் பக்கத்தில் வேலை செய்துகொண்டு இருந்தவர்களை அங்கு அழைத்துக்கொண்டு ஓடி வந்தார். சத்தம் கேட்டு அங்கு கிராம மக்கள் ஏராளமானோர் கூடினர்.

தப்பி ஓடியது

பொதுமக்கள் கூட்டத்தை  அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.  விவசாயிகளை மீட்ட பொதுமக்கள், அவ்விருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர். விவசாயிகளை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .