Freelancer / 2022 ஜனவரி 14 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டின் உண்மையான பெரும்பான்மையினர் விவசாயிகள் என்று தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், விவாசாயிகளின் சாபம் இந்த அரசாங்கத்தை சும்மா விடாது என தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் வருடாந்த பொங்கல் விழா, கொழும்பு வெள்ளவத்தை காலி வீதி சந்தைக்கு எதிரில் நடைபெற்றது. ஜமமு கட்சி உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர் ரெலோ கட்சி பேச்சாளர் சுரேன் குருசுவாமி ஆகியோருடன் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு மனோ எம்பி மேலும் கூறியதாவது,
தை பிறந்தால் வழி பிறகும் என நாம் பாரம்பரியமாக கூறி வருகிறோம். தீர்வு பிறக்கும் எனவும் கூறி வருகிறோம். இந்த வருடம் தை இன்று பிறந்துள்ளது. இந்த தையில் தீர்வு பிறக்கவில்லை. ஆனால், தீர்வுக்கான வழி பிறந்து விட்டது என நான் எண்ணுகிறேன். அதோ தீர்வு வருகிறது என கை காட்ட கூடிய, குறி சொல்ல கூடிய வழி பிறந்து விட்டது என நான் எண்ணுகிறேன்.
நாட்டின் நெல் விளைச்சலை, காய்கறி விளைச்சலை, கிழங்கு விளைச்சலை அதிகரிக்க வேண்டுமென்றால் அதற்கு கட்டாயமாக உரம் தேவை. இன்று இந்நாட்டில் இந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான கொள்கை காரணமாக உரம் இல்லை.
அதனால் விளைச்சலை அதிகரிக்க சூரிய பகவானை கைகூப்பி வணங்கும், நன்றி தெரிவிக்கும் இந்த நல்ல நாளில், விவசாயிகளின் துன்பத்தை கரிசனையில் எடுக்க வேண்டியுள்ளது.
இது ஒரு விவசாய நாடு. விவசாய மக்கள் மத்தியில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பெளத்தர், இந்து, இஸ்லாமியர், கத்தோலிக்கர் இருக்கின்றார்கள். இந்நாட்டின் உணமையான பெரும்பான்மையினர் விவசாய குடும்பங்களை சார்ந்த ஐயாமார்களும் அம்மாமார்களும்தான். இந்த பெரும்பான்மையினரை இந்த அரசாங்கம் ஆபத்தில் போட்டு விட்டது என்றார்.
39 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago