2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் அறிவிப்பு

Nirosh   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுபாடுகள் முழுமையாக நீக்கப்படவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையில் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு இதுவரையில் எந்தவிதமானத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதேவேளை, அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிப்போருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நாட்டை தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது. அலுவலகங்களையும் தொடர்ந்து மூடி வைத்திருக்க முடியாது எனினும், நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 2 ஆயிரத்து 500இக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை நீக்கிக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .