2023 ஜூன் 07, புதன்கிழமை

ராகுலுக்கு ஆப்பு; தேர்தலில் போட்டியிட முடியாது

Freelancer   / 2023 மார்ச் 24 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்தி மோடியின் பெயரை பயன்படுத்தி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.

இதையடுத்தே அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை காலமான 2 வருடம் மற்றும் அதற்குப்பின்னரான 6 ஆண்டுகள் என 8 வருடங்களுக்கு அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிடப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .