2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

பலருக்கும் மது கசந்தது

Editorial   / 2023 மார்ச் 19 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை பொறுத்தவரையில் மதுபானங்களை பருகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கின்றனமை கண்டறியப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டின் கலால் வரி வருமானம் 350 கோடி ​ரூபாவினால் குறைந்துள்ளது என கலால் திணைக்கள அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் கலால் வரி வருமானம் 2,860 கோடி ரூபாயாகும். எனினும், 2023 ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 2,510 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் கலால் வருமான வரி ஆதாயம் இவ்விரண்டு மாதங்களிலும் 12.2 சதவீதத்தால் குறைந்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X