2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

இறக்குமதி அரிசியின் விலை தொடர்பில் வெளியான தகவல்

J.A. George   / 2021 ஒக்டோபர் 29 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாய்க்கு இன்று (29) முதல் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

சுங்கத்தின் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் இதுவரையில் நாட்டரிசி அடங்கிய 09 கொள்கலன்கள் தமது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .