2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

குத்திக் கொள்ளாவிடில் கூடுதல் கட்டணம்

Freelancer   / 2021 ஜூலை 31 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் விசேட திட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பயணத்தின் போது தடுப்பூசி செலுத்தப்பட்ட அட்டையைக் காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என  தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் முதல் டோஸை கூட பெறாத பயணிகளிடம் சாதாரண பஸ் கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் அறவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை  (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X