2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

பால்மா 200 ரூபாவால் அதிகரிப்பு?

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதிச் செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவினால்
அதிகரிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பால்மா இறக்குமதியாளர்களுக்கும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையில், சனிக்கிழமை (19) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே, இறக்குமதிச் செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிக்குமாறும் ஒரு கிலோகிராமுக்கு 350 ரூபாய் அதிகரிக்கப்படவேண்டுமென இறக்குமதியாளர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அக்கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்படவில்லை. எனினும், 200 ரூபாவில் அதிகரிப்பது தொடர்பில்  கலந்துரையாடப்பட்டுள்ளது. இறுதித் தீர்மானம் எவையும் எட்டப்படாத நிலையில், அடுத்தவாரம் கூடவிருக்கும் வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்திலே​யே ஆராயப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

நமது நாட்டில், 6,000 முதல் 7,000​ மெற்றிக்தொன் வரையிலும் மாதாந்தம் பால்மா நுகரப்படுகின்றது. தினசரி நுகர்வு 200 மெற்றிக் தொன் ஆகும். 1 கிலோ கிராம் பால் மாவின் தற்போதைய விலை ரூ.945 மற்றும் 400 கிராம் பக்கெற் ரூ .380 க்கு விற்கப்படுகிறது.

இறக்குமதியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வருமாயின் 1 கிலோ பால் மாவின் புதிய விலை 1,145 ரூபாவாகும் மற்றும் 400 கிராம்
பக்கெற் ரூ .580 க்கு விற்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X