Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Nirosh / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி, நாட்டை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதி தேவையான அளவு அரசாங்கத்திடம் காணப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருக்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கிக்கொண்டு, நாட்டு மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கி கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாாட்டில் அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - வெள்ளவத்தையில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டின் அபிவிருத்திப் பணிகளை பார்ப்பதற்கு சிலருக்கு விருப்பமில்லை. பார்த்தாலும் பார்க்காததுபோலவே இருக்கிறார்கள். சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தீர்மானங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளாது. எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என இன்று உறுதியாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஒழுக்கமான அரசாங்கம். அதனாலேயே சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பில் அதற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அந்த பதவிகளை துறந்தார் எனவும் கூறியுள்ளார்.
மனித உரிமை மீறல் தொடர்பிலான பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டதல்ல. இப்பிரச்சினை எல்லாக் காலங்களிலும் காணப்பட்டன. இப்போது இப்பிரச்சினைகள் மனித உரிமைகள் பேரவைக்கு சென்றுள்ளன. அதற்கு அரசாங்கம் முகங்கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .