2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

எப்படி திறக்கப்பட்டன ஏன்? திறக்கப்பட்டன

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடுபூராகவும் உள்ள மதுபானசாலைகள் யாவும் அரசாங்கத்தின் அனுமதியின் பின்னரே திறக்கப்பட்டன என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அனுமதியின்றி மதுபானசாலைகளை திறக்க முடியாது என்றும் தெரிவித்த அவர், அரசாங்கத்திடமிருந்து ஏதோவொரு வகையில் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே நாடுபூராகவுமுள்ள உரிமம் பெற்ற மதுபானசாலைகள் திறக்கப்பட்டன என்றார்.

கிராமங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மதுபானங்களை பலர் பருகுவதுடன், அது ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மதுபானசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .