2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம் சித்தப்பாவுக்கு சிறை

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 16 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ம​ஹேஸ் கீர்த்திரத்ன

தனது மனைவியின் சகோதரியின் மகளுக்கு இனிப்பை வழங்கி, அச்சிறுமியை பாலியல்
துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் ஒருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்து
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சித்தப்பா முறையான குறித்த சந்தேகநபரை எதிராக மூன்று குற்றச்சாட்டுகள்
சுமத்தப்பட்டிருந்தன. அந்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம்
ஒவ்வொரு குற்றசாட்டுக்கும் தலா 10 வருடங்கள் என 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்து, மாத்தளை மேல்நீதிமன்றத்தின் நீதிபதி கலாநிதி சுமுது பிரேமசந்ர
உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட நபர், மாத்தளை- கலேவல, வலஸ்வெவ
பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 30 வருட சிறைத்தண்டணைக்கு மேலதிகமாக, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 5,000 ரூபாயாக 15,000 ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு
50,000 ரூபாய் நட்டஈட்டையும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், 15,000 ரூபாய் அபராதபணம் செலுத்தாவிட்டால், 6 மாதங்களுக்கு தளர்த்தப்பட்ட
வேலைகளுடன் கூடிய சிறைத்தண்டனையும் நட்டஈட்டை செலுத்தாவிடின் ஒரு வருட
தளர்த்தப்பட்ட வேலைகளுடன் கூடிய தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிக்கு இனிப்பை வழங்கி, இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் என
சந்தேகநபருக்கு எதிராக கலேவல பொலிஸாரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, நிரூபிக்கப்பட்டுள்ளதால் இத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .