2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

’பிரதமரும் கல்வி அமைச்சரும் என்ன செய்தார்கள்?’

Nirosh   / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பா.நிரோஸ்)

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக உள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர் காமினி லொக்குகே, இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காது நல்லாட்சி அரசாங்கத்தின் கல்வி அமைச்சரும், பிரதமரும் என்ன செய்துக்கொண்டிருந்தார்கள் எனவும் வினவினார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (03) அமர்வில் கலந்துக்கொண்டு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,  இந்த சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது எனவும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கல்வி அமைச்சரும், பிரதமரும் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காது என்ன செய்துக்கொண்டிருந்தார்கள்? எனவும் அவர் இதன்போது வினவினார்.

இதற்கு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி பதிலளித்த எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவும் எம்.பியுமான லக்ஷமன் கிரியெல்ல, “கடந்த நால்லாட்சி அரசாங்கம் ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கியது நினைவில்லையா?” என வினவினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .