2022 ஜூலை 02, சனிக்கிழமை

ரணில் விவகாரத்தில் மொட்டுக்குள் இருவேறு நிலைப்பாடு

Freelancer   / 2022 மே 14 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.யசி 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் புதிய  அமைச்சரவையை உருவாக்கும் முயற்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன கட்சிகள் அதனை நிராகரித்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிடம் தெரிவிக்கவுள்ளனர். 

இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்கும் இடையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது கட்சியின் கொள்கை ரீதியிலான நிலைப்பாடுகள், மற்றும் மக்கள் ஆணை என்பன குறித்தும் கேள்வி எழுப்பவுள்ளதாக பொதுஜன முன்னணியின் ஒரு தரபபினர் தெரிவித்துள்ளனர். 

எனினும் பஷில் ராஜபக் ஷவின் அணியாக செயற்படும் தரப்பினர் பிரதமர் ரணிலின் தலைமையிலான அமைச்சரவையில் பங்குபற்ற இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஷில் ராஜபக் ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .