2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

நேரம் கொடுக்க த.தே.கூ மறுப்பு

Editorial   / 2020 நவம்பர் 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபையில் தற்போது, 2021 வரவு- செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

அதில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

அவருக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் நிறைவடைய விருப்பதாக, சபாநாயகர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அறிவுறுத்தினார். எனினும். தன்னும் இன்னும் 10 நிமிடங்கள் வழங்குமாறு ஹர்ச டி சில்வா கோரிநின்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சி பேச்சாளர்களிடமிருந்து ஒவ்வொரு நிமிடத்தை கழித்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

எனினும், ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், “மேலதிக ஒரு நிமிடத்தை எங்களின் கட்சி பேச்சாளர்களிடமிருந்து கழிக்கவேண்டாம். அதற்கு நாங்கள் இணங்கமாட்டோம். வேண்டுமென்றால், அவர்களின் கட்சிப் பேச்சாளர்களிடமிருந்து கழித்துகொள்ளவும்” எனக் கூறியமர்ந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த லக்ஷ்மன் கிரியெல்ல, “ஐந்து நிமிடங்களை எங்களுடைய பேச்சாளர்களின் ​நேரத்தில் கழித்துகொள்ளவும்” மிகுதி நேரத்தை, பொது நேரத்தில் கழித்துகொள்ளவும்” என்றார்.

எனினும். தனக்கு ஐந்து நிமிடங்கள் போதாது, 15 நிமிடங்கள் தேவை எனக் கூறி, ஹர்ச டி சில்வா தனது உரையை தொடர்ந்துகொண்டிருக்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .